50 ஆண்டுகளுக்குப்பின் மியன்மாரில் இராணுவம் சாராதவர் அதிபரானார்




50 ஆண்டுகளுக்குப்பின் மியன்மாரில் இராணுவம் சாராதவர் அதிபரானார்
மியன்மாரின் புதிய அதிபராக டின் சாவ் பதவியேற்றிருக்கிறார்.
ஐம்பதாண்டுகளுக்குப்பிறகு இராணுவம் சாராத சிவிலியன் ஒருவர் அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.
அவரது பதவியேற்பு தலைநகர் நாய்பீடாவில் இன்று நடந்தேறியது.
சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சியிடமிருந்து அதிகாரம் சிவில் ஆட்சியாளர்களுக்கு படிப்படியாக கைமாறுவதன் இறுதி நிகழ்வாக இன்றைய பதவியேற்பு பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி தலைவி ஆங் சாங் சூசி
தேசிய நல்லிணக்கத்துக்காக தாம் பாடுபடப்போவதாக புதிதாக பதவியேற்றிருக்கும் டின் சாவ் அறிவித்திருக்கிறார்.
ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவி ஆங் சான் சூசி தற்போதைய அரசியல் சட்டப்படி அதிபராக பதவியேற்க முடியாது. அதேசமயம் அவர் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த ஆட்சியின் முழு பொறுப்பும் தன்னிடமே இருக்கும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
அதேசமயம், முக்கிய அமைச்சரவை இலாகாக்கள் அனைத்தும் பர்மிய இராணுவத்தின் வசமே தொடர்ந்தும் இருக்கும்.