கல்லடி ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு




மட்டக்களப்பு  கல்லடி பாலத்திற்கு அருகில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்லடி ஆற்றில் இன்று பிற்பகல் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
உயிரிழந்தவர் கல்லடி திராய்மடு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வி.யூலியன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.