அடுத்த சட்மா அதிபர் யார்?




சட்ட மா அதிபரை தெரிவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி சட்ட மா அதிபர் யுவன்ஜன வனசுந்திர பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டார்.
சுமார் ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில் இன்னமும் சட்ட மா அதிபர் பதவிக்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அரசியல் சாசன பேரவையினால் அனுமதித்தன் பின்னர், ஜனாதிபதி சட்ட மா அதிபரை நியமிப்பார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளார். எனினும், இன்னமும் சட்ட மா அதிபர் ஒருரை தெரிவு செய்வதில் சிக்கல் நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது