அனைத்து தகைமைகளையும் கொண்டிருக்கின்றேன் என்கிறார் சுகத கம்லத்





சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் மட்டுமன்றி அனைத்து தகைமைகளையும்
கொண்டிருக்கின்றேன் என்கிறார் சொலிஸிஸ்டர் ஜெனரல் சுகத கம்லத்

* தமிழில் தேசிய கீதம் பாடியமை மிகவும் அழகானது. நாம் நீண்டநாட்களாக வலியுறுத்திய விடயம் நடந்தேறியுள்ளது.
* தமிழ் அரசியல்கைதிகள் விடயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. நான் பதவியேற்றால் அவ்விடயத்தில்தான் முதலில் கவனம் செலுத்தி விடுதலைசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
* வதந்திகளைப் பரப்புவதைவிடுத்து என்மீது ஊழல் குற்றச்சாட்டுகளோ வேறேதும் குற்றச்சாட்டுகளோ இருந்தால் பகிரங்க விசாரணை மூலம் நிரூபித்துக் காட்டுங்கள்.
சட்டமா அதிபருக்கான வெற்றிடம் காலியாகியுள்ள நிலையில் அடுத்த சட்டமா அதிபருக்கான அனைத்து தகைமைகளையும் கொண்டிருப்பதாக சொலிஸிட்டர் ஜெனரல் ( மன்றாடியார் நாயகம்) சுகத கம்லத் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் மூப்பின் அடிப்படையில் சிரேஷ்டத்துவத்தை மட்டுமன்றி, அனைத்துவிதமான தகைமைகளையும் கொண்டிருக்கின்றேன்” என்று நேற்று அவர் மேலும் கூறினார்.