சிசிலியா கொத்தலாவல கைது




செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கோல்டன் கீ நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் நிரந்தர வைப்பாளர்கள், தமது வைப்பு பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்றிருந்ததாகவும், அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்ற சிசிலியா கொத்தலாவல, இங்கிலாந்திலிருந்து கட்டார் வழியாக இலங்கைக்கு வருகைதந்த போது, கைதுசெய்யப்பட்டதாக குடியகல்வு திணைக்க அதிகாரிகள் ;குறிப்பிட்டுள்ளார்