சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன்- மஹிந்த





 சுதந்திர தின நிகழ்வுக்கு இதுவரை அழைப்புக் கிடைக்கவில்லையெனவும், கிடைத்தாலும் கலந்துகொள்ளப் போவதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
கூட்டு எதிர்க் கட்சிகள் சுதந்திர தினத்தைப் புறக்கணிப்பதாக எடுத்துள்ள தீர்மானத்தில் தானும் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.