“பைனஸ்” வனப்பகுதியில் தீ





(க.கிஷாந்தன்)

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை - ரொசல்ல பிரதேச “பைனஸ்” வனப்பகுதியில் 04.02.2016 அன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

ஐம்பது ஏக்கரைக் கொண்ட இந்த “பைனஸ்” வனப்பகுதியின் 15 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

04.02.2016 அன்று மதியம் 2 மணியளவில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டவளை பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த பகுதியில் எவராவது தீ வைத்ததால் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதா? அல்லது இயற்கையான காட்டுத்தீயா? என இதுவரை தெரியவில்லை என வட்டவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.