நுவரெலியா பகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறிப்பிட்ட பஸ் நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு பாதையில் சமர்செட் தோட்டத்திற்கு அருகமையில் 01.02.2016 அன்று இரவு வேளையில் வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து நுவரெலியா அம்பேவெல பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் சிவனொளிபாதமலையின் யாத்திரைக்காக செல்லும் போதே குறித்த பஸ்ஸில் தடுப்பு கட்டை செயழிலந்ததன் காரணமாக சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பஸ்ஸில் 15 பேர் வரை பயணித்துள்ளதாகவும் இதில் எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.