சுதந்திர தின நிகழ்வுகளை கூட்டு எதிர்க்கட்சி புறக்கணிக்கும்




சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இது தொடர்பாக தெரிவித்தார்.
இதேவேளை, மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரை அரசாங்கத்தின் அனைத்து நிகழ்வுகளையும் கூட்டு எதிர்க்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்