ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தலங்களில் வீடியோவை பதிவு செய்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசாரதேரரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தமை தொடர்பில், நபரொருவரால் வீடியோ ஒன்று அண்மையில் பதிவேற்றப்பட்டது.
மேலும், இவ்வாறானதொரு வீடியோவை பெண்ணொருவரும் இணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இதன்படி இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.