விபத்தில் சிக்கிய சிறுவர்கள் பரிதாபமாக பலி




பண்டாரகம - கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

இன்று பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற மூன்று சிறுவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதுருகிரியவில் இருந்து வந்த குறித்த முச்சக்கர வண்டியில் ஏழ்வர் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இவர்களில் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு சிறுமியும் பலியான நிலையில் காயமடைந்த நால்வர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.