ஜிம்பாப்வேயில் 'பேரழிவுகால' நிலை பிரகடனம்





மேய்ச்சல் தரைகள் இல்லாமல் ஆயிரக் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
ஜிம்பாப்வேயில் வறட்சியினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெரும் பிரதேசங்களில் அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே 'பேரழிவுகால' நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
விவசாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 லட்சம் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
மேய்ச்சல் தரைகள் இல்லாமல் ஆயிரக் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
ஜிம்பாப்வேயில் 'பேரழிவுகால' நிலையை அறிவிக்குமாறும், அப்படி அறிவித்தாலேயே சர்வதேச கொடையாளி நாடுகள் உணவு உதவிக்காக நிதி சேகரிக்கமுடியும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் முகாபேயிடம் கோரியிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து ஜிம்பாப்வேயில் வழமைக்கு மாறாக மிகவும் சொற்பமான அளவே மழைபெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.