பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு




பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த ஒருவருக்கு 50,000 ரூபாவை நஸ்டஈடாக வழங்குமாறு நீதிமன்றத்தால் பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளை, பணி முடித்து விட்டு வீடு செல்ல கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த தான் தாக்கப்பட்டதாகவும், அதற்காக உரிய நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி, நபரொருவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த துமிந்த கபுஆராச்சி என்பவரால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு 50,000 ரூபா நஸ்டஈடு வழங்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமாலி ரணவீர உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது