வத்தளை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து






வத்தளை - மாபோல பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இன்று (07) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

வர்ணப் பூச்சி தயாரிக்க பயன்படும் இரசாயனங்களே இந்தக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும் இதனால் எவருக்கும் உயிர் ஆபத்​தோ காயங்களோ ஏற்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இதேவேளை ஏற்பட்ட சேதங்கள் இதுவரை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.