ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைன் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
ஈ.கே. 650 ஆம் இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் இன்னும் 6 பேர் கொண்ட தூதுக் குழுவும் விஜயம் செய்துள்ளது.
வெளிவிவகார அமைச்சரின் அதிகாரிகள் குழுவொன்றினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஆணையாளர் நாயகம் தலைமையிலான தூதுக்குழு வரவேற்கப்பட்டது. (TKS DAILY CEYLON)