மனித உரிமைகள் ஆணையாளர் நாளை வருகை. இன்று ஆரப்பாட்டம்




ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைன் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார்.
இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உட்பட அரசியல் தலைவர்கள், அரச சார்பற்ற நிருவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நீதிபதிகளின் ஹைப்ரிட் நீதிமன்றம் தொடர்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார். இவர் தனது விஜயம் குறித்து இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இன்று மாலை இவரது வருகையினை எதிர்த்து, ஆர்ப்பபாட்டம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது