(வரதராஐன்- நியுசிலாந்து)
திரு சுமந்திரனின் பிறந்தநாள் இன்று!
ஆண்டவர் என்றும் அவருடன் இருப்பாராக!
பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மன்னிக்கவும் அவருடன் எனக்குப் படம் எடுக்கக் கிடைக்கவில்லை.
என்னால் என்னுடன் படம் எடுக்க இருந்த பல தலைவர்கள் கலைஞர்களைப் போல- (பகிடிக்கு )
சுமந்திரன் இன்று தமிழ் கூறும் நல்லுலகின் ஒவ்வொருவரின் பக்கத்திலும் படம் எடுக்காவிட்டாலும் இல்லாவிட்டாலும் விரும்பியோ விரும்பாமலோ நிற்கிறார்.
சுமந்திரன் பற்றி நாம் முன்னர் ஒரு இடுகையிட்டவேளை , எனது உறவினரும் மூத்த அரசியல் போராளியுமான ஒருவர்
- "சுமந்திரன் பற்றி பல கதைகள் சொல்கின்றனர் வரதன் . உங்களுக்கு அது தெரியுமா ?"
என்று குறிப்பு இட்டிருந்தார்.
பின்னர் சில மாதங்களின் பின்னர் அவர் ஒரு குறிப்பை இட்டார். அதில்:-
" திரு சுமந்திரனுடன் நேரடியாக ஒரு பொழுது பேசக் கிடைத்தது .அவர் இறைவனுக்குப் பயமுள்ளவர் .
பல விடயங்களை மனம் விட்டுப் பேசினார் . கதைக்கும்போதுதான் பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன் . தீர்க்கமாக உள்ளார்.
பலர் வெளியிலிருந்து எழுதுவார்கள் .இங்கு வந்து பார்த்தால் தான் புரியும். "
என்று குறிப்பிட்டிருந்தார்
திரு சுமந்திரனுக்கு எண் சோதிடத்தில் நம்பிக்கை உள்ளதோ என்னவோ- எனக்கு நீண்ட காலமாக இதனுடன் தொடர்பு உள்ளதை எனது நண்பர்கள் பெரியவர்கள் அறிவார்கள்.
இதன்படி ஒன்பதாம் இலக்கத்தவருடன் நான் நன்கு அனுபவ்த்துள்ளேன். திரு சுமந்திரன் தனி ஒன்பதாம் இலக்கத்தவர்.
நேராகவே எடுத்தவுடன் தமக்குப் பட்டத்தை சொல்லிவிடும் "நேர்மை" மிக்கவர்கள் ஒன்பதாம் இலக்கத்தவர்கள்.
கிளிநொச்சியில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் ஒன்றும் வல்வையில் ஒன்றும் சுவிசில் ஒன்றும் அவுஸ்திரேலியாவில் ஒன்றும் பேசும் தன்மை அவரிடம் இல்லை என்பதை யாவரும் அறிவர்.
அப்படிச் செய்பவர்களையும் மக்கள் அறிவார்கள்.
கட்சியில் உள்ளே ஒன்றைக் கூடியிருந்து கதைத்துவிட்டு வெளியே வந்து கால சூழ் நிலைக்கேற்ப அறிக்கைவிடும் தன்மையும் அவரிடம் இல்லை என்பதை ஊடகவியலாளர்களே சொல்வதுண்டு.
இப்படிக் கதைத்தால் பேசினால் தான் மக்கள் மத்தியில் புகழுடன் சீவிக்கலாம் ; மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் ஒன்பதாம் இலக்கக் காரர்கள் பொதுவாகவே நினைப்பதில்லை. பொதுவாகவே சரியான தெளிவுடன் கூடியதாகவே அவர்கள் தீர்மானிப்பார்கள் முடிவும் எடுப்பார்கள்.