கலேவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல ஒமாரகொல்ல பகுதியில் பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மோதிய பேரூந்து பின்னர் மரத்திலும் மோதியுள்ளதாகவும், இச்சம்பவத்தில் பேரூந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த நபர்கள் கலேவேல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.