புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாம் பிணையிலாவது வெளியில் வந்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டத்தரணியிடம் பெரும் தொகைப் பணத்தினைக் கொண்டுத்த சுவிஸ்குமாரும் அவருடைய 3 உறவினர்களுக்கும் சட்டத்தரணியின் தலைமறைவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுவிஸ்குமாரும் அவருடைய 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருந்த போதும் புங்குடுதீவில் வைத்து கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் அந்த வேளை வடமாகாண பிரதிப் பொஸ்மா அதிபராக இருந்து பூஜிதஜெயசுந்தர என்பவருக்கு பொரும் தொகை பணத்தினை கைமாற்றிவிட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர் வெள்ளவத்தைப் பொலிஸாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு மீண்டும் இக் கொலை வழக்கின் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் வித்தியா கொலையாளிகள் சார்பில் ஆஜராவதற்கு வடமாகாணத்தில் உள்ள எந்த சட்டத்தரணிகளும் முன்வரவில்லை.
இந்நிலையில் மீண்டும் பெரும் தொகை பணத்தினை செலவிட்டு சுவிஸ் குமாரும் அவருடைய சகோதர்களுமாக 4 பேர் தென்னிலங்கையில் இருந்து சட்டத்தரணி ஒருவரை வரவளைத்திருந்தனர்.
அவர்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்ட சட்டத்தரணி சரத்வல்கமுவ வித்தியா கொலை வழக்கில் 4 முறை ஆஜராகியிருந்தார்.ஓவ்வொரு முறை ஆஜராகும் போதும் ஒவ்வொருவர் சார்பில் 25 ஆயிரம் ரூபா வீதம் 1,00000 (ஒருஇலட்சம்) பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் வழக்கு தவணைக்காக அவர் கொழும்பில் இருந்து வருவதற்கு தனி வாகன் ஏற்பாடு செய்யப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றிலும் வழக்கு தவணைக்காக வரும் அவர் தங்குவார்.
இவை இரண்டிற்குமாக தனியே 50 ஆயிரம் ரூபா செலவு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பெரும் தொகை பணத்தினை செலவிட்டு சுவிஸ் குமாரும் அவருடைய உறவுகளும் வித்தியாவின் கொலை வழக்கில் இருந்து எவ்வாறாவது தப்பித்துக் கொள்வதற்கு முயட்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இருந்த போதும் சட்டத்தரணி அவர்களிடம் பணத்தினைப் பெற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.