இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிடிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன மற்றும் எம்பிலிபிடிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக இருந்த எஸ்.ஆர்.ஜே.டளஸ் உள்ளிட்ட சிலரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றம் கடந்த 27ம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில நாட்கள் ஆன போதும், சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கப் பெறாததால் அவர்கள் கைதுசெய்யபடவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று வாக்குமூலம் அளிக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட தர்மரத்ன பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது