நியூசீலந்தின் தேசிய கீதமும் எமது புதிய அரசியலமைப்பும்:-




(வரதராஐன்-நியுசிலாந்து)

நியூசீலந்தின் தேசிய கீதமும் எமது புதிய அரசியலமைப்பும்:-
கவனிக்கப்பட வேண்டியவை !
நியூசீலந்தின் அலுவலக மொழிகள் மூன்று ஆகும்.
1) மவுரி மொழி
மூத்த குடி மக்கள் எனக் கருதப்படும் பழங்குடி மக்களின் மொழி மவுரி மொழி 
( உலகில் வாழும் செவ்விந்தியர், தமிழர்கள் போல பழமை வாய்ந்த குடியினர் மவுரி இனத்தவர் . இவர்கள் பசுபிக் கடலிலுள்ள சிறு தீவுகளிலிருந்தும் ; தாய்வான் ; நாட்டிலிருந்தும் வந்தேறியவர்களாக வரலாற்றுக் கணிப்பும் உள்ளது

2) ஆங்கில மொழி
3) சைகை மொழி
நியூசீலந்தின் தேசிய கீதம் இந்த மூன்று மொழிகளிலும் ஆக இரண்டு நிமிடங்கள் ஒரு செக்கனில் பாடப்பட்டு முடிக்கப்பட்டுவிடும்.
நாட்டின் முன்னேற்றத்தில் நேரத்தின் வகிபாகத்தை; அவசியத்தை ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதங்களிலும் வைத்துச் சொல்லிவிடமுடியும்.
எல்லா அரச வைபவங்களிலும் பாடப்படும் இந்தத் தேசிய கீதத்தின் அளவு ஆக இரண்டே நிமிடங்கள் தான்.
ஆனால் மூன்று மொழிகளிலும் பாடப்படுவதை அரசியலில் ,சமூக அரசியலில் ஊடகத்துறையில் மட்டுமல்ல இசையும் இசைசார் காட்சிப் படைப்பிலும் ஆர்வமுள்ளவர்கள் (இதனை )ஒருக்கால் பார்ப்பது நல்லது.
( குறிப்பு:- மவுரி மொழியில் Aotearoa அயொத்திரோஆ என்பது நியூசீலந்தைக் குறிக்கும் .அவர்கள் தமது மொழியில் நியூசீலந்து என்று பாடவில்லை.ஆங்கிலத்தில் "அயோதியோரா "என்றும் பாடப்படவில்லை. தேசிய கீதத்தில் தாய் நாடு போல தங்கள் தங்கள் தாய் மொழிக்கும் ஒரே மதிப்பை வழங்கியிருக்கிறார்கள் )
எங்கோ ஒரு நாட்டின் ஒரு மூலையில் யாரோ ஒருவர் வேறு ஒரு மொழியில் எழுதிய கவியை "இறக்குமதி செய்து " இன் னொரு மொழியில் தேசிய கீதமாக்கி அதனை வேறு மொழியிலும் மொழி பெயர்த்து அந்த முதல் நாள் ஒலிபரப்பி - இன்று பல கபளீ கரங்களைஎல்லாம் கடந்தபின்னரும் கூட- அந்த இறக்குமதி செய்யப்பட்ட" அதனைக்" கூட ஒரு மொழியில் மட்டுமே பாடுவோம் என்று சொல்பவர்கள் ஒருநாள் ஆட்சிக்கு வரும்போது இறக்குமதி செய்யப் படுபவற்றைக் கூட நமக்குத் தருவார்களா ? என்று " ஆஹா ...ஆஹா தேசிய கீதம் தமிழில் கூட பாட வந்தாச்சு ! ..நம்மைச் சுற்றிய பசாசுகள் போயாச்சு ! என்று கூறும் புதிய அரசியலதிகாரம் பற்றிய ஆலோசனை வழங்குபவர்கள் கவனிப்பார்களாக!