பிரதி அமைச்சர் அஜித் சி பெரேராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்





(க.கிஷாந்தன்)

சமூர்த்தி செயல்திட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு இவ் அதிகாரிகளை தரம் குறைவாக பேசியதாக கூறப்படும் மின்சாரம் மற்றும் புனர்நிர்மான துறை பிரதி அமைச்சர் அஜித் சி பெரேராவுக்கு எதிராக 09.02.2016 அன்று நுவரெலியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் 300 இற்கு மேற்பட்டவர்கள் நுவரெலியா நகரில் 09.02.2016 அன்று காலை ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்பாட்டகாரர்கள் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திலிருந்து பிரதான வீதி வழியாக எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் நகரத்தின் மத்தியில் கோஷங்களை எழுப்பியவாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்பாட்டம் அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.