ஆணையாளருக்கு அல்ல ஆணைக்குழுவிற்கு எதிராகவே வழக்குத் தாக்கல்




தேர்தல்கள் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணையாளரோ, தேர்தல்கள் திணைக்களமோ அதிகாரத்தில் இல்லையெனவும், இவ்வாறிருக்கையில் தேர்தல் ஆணையாளருக்கு எதிராக எவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பீல்ட் மாசல் சரத்பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழக்கினால், தேர்தல்கள் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக இன்றைய வார இறுதி சிங்கள பத்திரிகையில் கூட்டு எதிர்க் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து வினவிய போதே டெய்லி சிலோனிடம் அவர் கூறினார்.
தேர்தல்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதாக இருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெயரிலேயே தொடர முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.