ஆணையாளருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு




ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசேய்ன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இன்று சென்றிருக்கிறார்.
அங்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசியுள்ளார்.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் அவர் மக்களை சந்தித்து பேசியமை, ஆளுனரை சந்தித்தமை மற்றும் செய்தியாளர்களையும் சந்தித்ததுள்ளார்.வட மாகணம் எதிர்கொள்கின்ற சவால்களை மையப்படுத்தியே பேச்சுக்கள் இருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் காணாமால் போனோர் தொடர்பான விஷயங்கள், மாகாணத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்தும் பேசப்பட்டன என அல் ஹுசைன் பின்னர் கூறினார்.
அவர் முதலமைச்சரை சந்திக்க சென்றபோது, காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது பயணத்தின்போது காணாமல் போனோரின் உறவினர்களையும் ஐ நா ஆணையர் சந்திப்பார் என அவருடன் சென்றிருந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்ட பிறகு அவர் முல்லைத்தீவுக்கும் செல்கிறார்.

இதேவேளை, பிற்பகல் இரண்டு மணியளவில் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசேய்ன், அங்குள்ள விமானப்படை முகாமையும் பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.