ஹஜ் ஏற்பாடுகளுக்கு புதிய முறை – முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு




இவ்­வ­ருடம் முதல் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு புதிய முறை­யொன்­றினை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஹஜ் குழு திட்­ட­மிட்­டுள்­ளது.
கடந்த காலங்­களில் நீதி­மன்­றத்தின் வழி­காட்­டல்­க­ளுக்கு (GUIDE LINES) அமை­வா­கவே ஹஜ் குழு தனது ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வந்­தது. எனினும் நீதி­மன்ற வழி­காட்­டல்­களில் பல சவால்கள் ஏற்­பட்­ட­தை­ய­டுத்தே புதிய முறை­யொன்று அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
குறித்த புதிய முறை ஹஜ் முக­வர்­களின் ஆத­ர­வி­னையும் பெற்­றுக்­கொண்டே வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்­ளது.
குறித்த விடையம் ­தொ­டர்­பாக முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் செய­லா­ளரும் ஹஜ் குழு உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம் பாஹிம் விளக்­க­ம­ளிக்­கையில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்குப் புதிய முறை தொடர்­பாக ஹஜ்­குழு ஹஜ்­மு­க­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி வரு­கி­றது.
இது­வரை அனு­ப­வ­முள்ள மூன்று ஹஜ் நிறு­வ­னங்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன. ஹஜ்­ஜா­ஜி­களின் ஆலோ­ச­னை­களும் எழுத்து மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. புதிய நடை­முறை வடி­வ­மைக்கும் போது ஹஜ் பய­ணி­களின் நலனும், முக­வர்­களின் நலனும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.
தற்­போது அமு­லி­லுள்ள நீதி­மன்ற வழி­காட்­டல்கள் கார­ண­மாக ஹஜ் ஏற்­பா­டுகள் பல சவால்களுக்கு உட்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் புதிய நடைமுறை வடிவமைக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.