ஆணையருக்கு ஆர்ப்பாட்டம்




ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் ஸெய்த் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. பிரதான காரியாலயத்துக்கு முன்பாக தேசிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘இலங்கைக்கு கை வைக்காதே’ போன்ற கோசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது