-ஹுஸைன் -
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு (யூஎஸ்எயிட்) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களின் கரிசனைகளை செவிமடுத்து அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்த செயலமர்வில் இலங்கை நாடாளுமன்றத்தின் 50 ஆராய்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வார இறுதியில் இடம்பெற்ற இச்செயலமர்வும் இதன் தொடர் நடவடிக்கைகளுக்கும் 73 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் ஓரு பகுதியாக முன்னெடுக்கப்படுகின்றது என அமெரிக்கத் தூதரகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
;இந்த பயிற்சி தமிழிலும் சிங்களத்திலும் இடம்பெற்ற இப்பயிற்சிகளில் நிதி திட்;டமிடல், வரவு செலவுத் திட்டம், பொதுமக்கள் தொடர்பாடல், தொழில்துறைசார் அபிவிருத்தி போன்ற விடயதானங்கள் இடம்பெற்றிருந்தன.
நாடாளுமன்ற சீர்திருத்தம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உதவியுடன் இரண்டாவது தொடர் பயிற்சியாக இது இடம்பெற்றது.
இது இலங்கை நாடாளுமன்றம் தான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதற்கு உதவுவதற்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சி இது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்களின் திறனை அதிகரிப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றுவதற்கு உதவியாக அமையும் எனவும் இது நல்லாட்சியின் கொள்கைகளை மேலும் பலப்படுத்தும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார்.