இராகலையில் பெண் சிசுவின் சடலம் மீட்பு




நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று 07.02.2016 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு சென்ற சிலர் சிசுவின் சடலத்தை கண்டு இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.

தாய் சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிசுவை பிரசவித்த தாயை தேடி இணங்கண்டு கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்