பொருளாதார மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு உடன்படிக்கை (இட்கா) தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலுக்கு இந்திய விசேட தூதுக் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் முன்மொழிவுகளை இந்த தூதுக் குழு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கை வரவுள்ள இந்தக் குழுவினர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலருடனும், இராஜாங்க அதிகாரிகள் சிலருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
இட்கா உடன்படிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.