-ஹுஸைன் -
கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன நிருவாக சபை தெரிவு கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31.01.2016) இடம்பெற்றது.
நிருவாக சபைத் தெரிவுக்காக வாக்கெடுப்பு இட்மபெற்றபோது கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த அம்பாறை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எம். இக்பால் மீண்டும் அதிக விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் செயல்படுகின்ற கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனம், ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனம், ஆசிய கராத்தே சம்மேளனம் மற்றும் உலக கராத்தே சம்மேளனத்துடனும், இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.