சாவகச்சேரியில் 100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட்களுடன் பெண்ணொருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 39,340,000.00 ரூபாய் (சுமார் 4 கோடி) என த்கேரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ் சாவகச்சேரி, சங்காணை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட பெண் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தங்க கட்டிகளை இன்று அதிகாலை 4.00 மணியளவில் மாதவல் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்