நாட்டில் அடையாளஅட்டை இல்லாதோர் தொகை 2லட்சம்பேர்:
பிறப்புப்பத்திரம் இல்லாமல் அடையாளஅட்டைபெறாதோருக்கு புதியஏற்பாடு!
ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத்குமார கூறுகிறார்!
(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
நாட்டில் தற்போது தேசிய அடையாளஅட்டை இல்லாமல் சுமார் 2லட்சம் பேருள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன் காரணமாவே அமையாளஅட்டையைபெறாமலிருக்கின் றனர் என்பது ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
எனவே வாக்காளர்இடாப்பில் பெயர் இருந்தும் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அடையாளஅட்டை பெற்றுக்கொள்ளாதிருக்கின்ற வாக்காளர்களுக்கு அடையாளஅட்டையை பெற்றுக்கொடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றுநிருபத்தை இலங்கை ஆட்பதிவுத்திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார சகல பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
2014இல் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டு ஆனால் முழு இலங்கையிலும் அடையாளஅட்டை பெற்றுக்கொள்ளாதோரின் எண்ணிக்கை 3லட்சத்து 40ஆயிரத்து 604ஆகும். அதில் பிறப்புஅத்தாட்சிப்பத்திரமில்லா மல் 132870 பேர் அடையாளஅட்டை பெறமுடியாமலிருந்தது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரமிருந்தும் ஆர்வமின்மை காரணமாக 120520 பேர் அடையாளஅட்டை பெறவில்லை.
ஏனைய காரணங்களினால் 87207பேர் அடையாளஅட்டையைப் பெறவில்லை.
2014அக்டோபரில் பிரதேச செயலாளர்களின் அறிக்கைமூலம் பெறப்பட்ட தரவுகளினடிப்படையில் இவ்வெண்ணிக்கையானது 2லட்சத்து50ஆயிரம் பேர் எனவும் 2015இல் இத்தொகை நடமாடும்சேவை அறிவூட்டல் நிகழ்ச்சிகளின்மூலம் 17500 க்கும் 2லட்சத்திற்கும் இடைப்பட்டது.
எப்படிப் பெறலாம்?
வாக்காளர் இடாப்பில் பெயரிருந்தும் பிறப்பத்தாட்சிப்பத்திரமில்லாத காரணத்தினால் அடையாளஅட்டைபெறமுடியாமல்போனவர் கள் தத்தமது கிராசேவை உத்தியோகத்தர்களிடம் உரிய விண்ணப்பத்திரத்தைப் பெற்று பூர்த்திசெய்து அவரது பரிந்துரையுடனும் அப்பிரிவில்வதியும் அடையாளஅட்டை அவைத்துள்ள மூவரின் சான்றிதழ்களுடனும் இவற்றை உண்மையென வெளிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் இணைத்து அனுப்பிவைக்கவேண்டும்.அதனூடாக அவர்கள் புதிய அடையாள அட்டையைப்பெற்றுக்கொள்ளமுடியும் .
அதுமட்டுமல்ல 2004ஆண்டின் 14ஆம் இலக்க சட்டத்தின்பிரகாரம் வாக்காளர்களினால் வாக்களிப்பதற்கு கட்டாயம் தேசியஅடையாள அட்டை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் வாக்களிக்கும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.
எனவே இதுவிடயத்தில் சகல கிராமசேவை உத்தியோகத்தர்களும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்வமூட்டி அடையாளஅட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.