ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று மாலை திடீரென சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே ஸ்ரீ சாமகிறி தர்ம மகா சங்க சபையினால் கோட்டே ரஜமகா விகாரையில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே இவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இந்த பூஜை நிகழ்வில் இருவரும் பூஜையின் முக்கிய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது