முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை இந்நாள் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன நிரூபித்துவருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்கள் பெண்களோடு களியாட்டங்களிலும், மதுபான நிலையங்களிலும் பெண்களோடு உல்லாசமாக இருந்தமை தொடர்பாக பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் மகனும், இப்பொழுது அதே மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.
நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறப்பான ஒரு கௌரவம் உண்டு.
அவர் நல்ல மனிதர் என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த விதவிமர்சனங்களுக்கும் உட்படாமல் வாழ்ந்துவருகின்றார்.
இலங்கையின் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட அவர். இன்றுவரைக்கும், எந்தவிதமான எதிர்விதமான விமர்சனங்களுக்கும் உட்பட்டதில்லை.
இதேவேளை, சர்வதேச ரீதியிலும் மைத்திரிபால சிறிசேனவிற்கு நற்பெயர் உண்டு.
ஆனால் அந்த பெயரை சிதைக்கும் வகையில் அவரது மகனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்கள் செய்த அதேவேலையை இவரும் செய்து வருகின்றார். இது எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமையும் என்று பேசப்படுகின்றது.
இது ஒருபுறமிருக்க, தனது தந்தையின் அதிகாரங்களை இவர் தவறான வழியில் பயன்படுத்துகின்றார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்மையில் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனா அதி உயர் ஆடம்பர கார் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். அந்த காரிலேயே இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளில் அவர் பங்குபற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.