தற்போதைய அரசின் பிரதான அபிவிருத்தி திட்டமான மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டம் இன்று (29) மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றளில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அமைய கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை உளிட்ட மேல்மாகாணம் பாரிய நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.