மயில் மாளிகையில் மணல் அகற்றல்




பிரபல தொழிலதிபர் ஏ.எஸ்.பீ. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் அகற்றும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் இந்த மாளிகையை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க ஏ.எஸ்.பீ. லியனகே தயாராக இருந்த நிலையில் பின்னர் அந்த தீர்மானம் மாற்றப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த மாளிகையை வழங்குவதற்காக குறித்த நீச்சல் தடாகத்தில் மணல் நிரப்பப்பட்டது. எனினும் குறித்த தடாகத்தில் தங்கம் உள்ளதாக கதைகள் பரப்பப்பட்டு வந்தன.
இதனை அடுத்து ஏ.எஸ்.பி.லியனகே பொலிஸ் மா அதி­ப­ரிடம் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த மணல் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது குறித்து விசா­ரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களின் மேற்பார்­வையில் இவ்­வாறு இந்த மணல் அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.