வலைத்தளங்களில் ஜனாதிபதியை சாடிய இவர்கள் தொடர்பில் விசாரணைகள்




சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான முறையில் ஜனாதிபதியை சாடியுள்ள நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகிறது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கீழ்த்தரமான முறையில் கெட்டவார்த்தைகளால் திட்டி அதனை வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நபர்கள் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை நடைபெற்றுள்ள விசாரங்களில் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விரைவில் அவர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.